இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! 12 பேர் வைத்தியசாலையில் அனுமதி - ஆபத்தான நிலையில் ஒருவர்
புதிய இணைப்பு
தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் காயமடைந்தவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கண்டியிலிருந்து திருகோணமலை நோக்கிச்சென்றுகொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்று தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில், பேருந்தில் பயணித்த 12 பயணிகள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன்போது வீதியில் சென்றுகொண்டிருந்த குளிரூட்டப்பட்ட பேருந்து ஒன்றும் இந்த விபத்தில் சிக்கியுள்ளதுடன், அதில் பயணித்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
தம்புள்ளை - மாத்தளை பிரதான வீதியில் நாவுல, நாலந்த பகுதியில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று (26) காலை சுமார் 9.20 மணியளவில் இந்த கோர விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
11 பேர் வைத்தியசாலையில்
தனியார் பேருந்தும், இலங்கை போக்குவரத்துச்சபைக்கு சொந்தமான பேருந்துமே இவ்வாறு மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும், விபத்தில் காயமடைந்த 11 பேர் நாலந்த மாவட்ட வைத்தியசாலை மற்றும் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில், தனியார் பேருந்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை போக்குவரத்துச்சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி தப்பி ஓடியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
பொலிஸார் விசாரணை
குறித்த விபத்து நடந்த நேரத்தில், சபாநாயகரும் கண்டி வழியாக கொழும்புக்குச் சென்று கொண்டிருந்தார் என்றும், இந்த திடீர் பேருந்து விபத்தின் காரணமாக, காயமடைந்தவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி சிகிச்சைக்காக அனுப்பி வைக்க சபாநாயகர் உதவியதாகவும் கூறப்படுகிறது.
விபத்து குறித்து நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பட்டித்திடல் படுகொலையின் 39ஆவது ஆண்டு நினைவுதினம் 10 மணி நேரம் முன்
சன் டிவியில் புனிதா, மணமகளே வா சீரியலை தொடர்ந்து முடிவுக்கு வரும் மற்றொரு சீரியல்... ரசிகர்கள் ஷாக் Cineulagam