ஹட்டனில் மதகில் பாய்ந்து சிறிய ரக லொறி விபத்து!
ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் சிறிய ரக லொறியொன்று பாதுகாப்பு கல்லினை உடைத்து கொண்டு சுமார் 15 அடி ஆழமான மதகில் பாய்ந்து விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு பிரதான வீதியில் ஸ்ரதன் பகுதியில் செனன் தமிழ் வித்தியாலயத்திற்கு அருகாமையில் குறித்த விபத்து இன்று (06.04.2026) மாலை சுமார் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நுவரெலியாவிலிருந்து பாதுக்கை பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலதிக விசாரணை
சாரதி சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நுவரெலியா பகுதியில் வர்த்தக நடவடிக்கைக்காக இராசயன திரவங்களை கொண்டு இறக்கிவிட்டு வெற்றுக்கேன்களுடன் கொழும்பு பாதுக்கை நோக்கி சென்று கொண்டிருந்த வேளையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

லொறிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் விபத்துக்கான காரணம் வீதி வழுக்கியதாகவும் அதனால் லொறி கட்டுப்பாட்டினை இழந்து மதகில் பாய்ந்ததாகவும் அதனை செலுத்திய சாரதி தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் நூல் வெளியீட்டு விழாவில் ...! ரில்வின் சில்வா வெளியிட்ட தகவல்


