நேருக்கு நேர் மோதிய பாரவூர்திகள் : ஒருவர் பலி - ஐவர் படுகாயம்
அநுராதபுரம் (Anuradhapura) பாதெனிய பிரதான வீதியில் தம்புத்தேகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் குழப்பம்! மாவையை கடும் தொனியில் எச்சரித்த சாணக்கியன்
நேருக்கு நேர் மோதி விபத்து
தம்புத்தேகமவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த சிறிய லொறி ஒன்றும் அநுராதபுரத்திலிருந்து தம்புத்தேகம நோக்கிப் பயணித்த லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது சிறிய லொறியில் பயணித்த நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்தவர்களில் ஒருவர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய நால்வரும் தம்புத்தேகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |