குடும்பத்தினரை கட்டி வைத்து பெறுமதியான உடைமைகள் கொள்ளை
சீதுவ, பிரதேசத்தில் வயோதிப தம்பதி மற்றும் அவர்களது மகளைக் கட்டிவைத்து பெறுமதியான உடைமைகள் அடையாளம் தெரியாத சிலரால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சீதுவை,லியனகேமுல்லை பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தொகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வயோதிபத் தம்பதி மற்றும் மகளை துணியால் கட்டி, தங்கம் மற்றும் சொத்துக்களை கொள்ளையிட்ட பின் குறித்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
மேலும், அந்த வீட்டில் வசிக்கும் 75 வயதுடைய பெண் ஒருவர் இது குறித்து சீதுவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதன் பின்னர் சந்தேக நபரை கைது செய்வதற்காக சீதுவ பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |