கட்டுப்பாடுகளை தளர்த்துவது எரியும் தீயில் எரிபொருளை சேர்ப்பது போன்றது - மருத்துவ நிபுணர்கள் சங்கம்
டெல்டா மாறுபாடு கண்டறியப்படும் நிலையில், நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் கோவிட் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது எரியும் தீயில் எரிபொருளைச் சேர்ப்பது போன்றது என்று ஏ.எம்.எஸ் என்ற மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஏ.எம்.எஸின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசி இலக்குகளை அடைந்தவுடன் தளர்வுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும். இன்னும் நான்கு முதல் எட்டு வாரங்களில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்ததும் இந்த தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
ஒரு தொழில்முறை அமைப்பாக, தற்போதைய மோசமான சூழ்நிலையில் முடிவெடுப்பவர்களை எச்சரிப்பது தமது, தலையாய பொறுப்பு என்று வைத்தியர் லக்குமார் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தளர்வுகள் பொதுமக்களைச் சென்றடையும் போது, அவர்கள் சுதந்திர பறவைகளைப் போன்று செயற்பட ஆரம்பிப்பர். இது நெருக்கடியை மேலும் மோசமாக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, கோவிட் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்து வரும் பின்னணியில், தமது தளர்வு முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தைக் கோர வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக லக்குமார் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஒக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரிப்பதால், அதற்கான திறன் முடிவடையும் நிலையை எட்டியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
