இந்திய கடற்றொழிலாளரை தேடும் பணி இன்றும் தொடரும்: கடற்படைப் பேச்சாளர் சுட்டிக்காட்டு

Rakesh
in பாதுகாப்புReport this article
இந்தியக் கடலோரக் காவல் படை மற்றும் இலங்கைக் கடற்படையினரால் இணைந்து மாயமான இந்திய கடற்றொழிலாளரை தேடும் பணி நேற்று வெற்றியளிக்காத நிலையில் இன்றும் தேடுதல் பணிகள் தொடரும் என்று இலங்கைக் கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
"நேற்றைய தினம் நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி தொழிலில் ஈடுபட்ட இந்திய இழுவைமடிப் படகை எமது கடற்படை கைது செய்ய முற்பட்டது.
கைது நடவடிக்கை
இதன்போது இந்திய கடற்றொழிலாளர்கள் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முற்பட்டனர்.
தொடர்ந்து ஏற்பட்ட விபத்தின் காரணமாக இந்திய இழுவைமடிப் படகு கடலினுள் மூழ்கியது. உடனடியாக 3 கடற்றொழிலாளர்கள் மீட்கப்பட்ட போதிலும் ஒருவர் கடலினுள் மாயமானார்.
மீட்கபட்ட மூவரில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் புங்குடுதீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், இந்திய - இலங்கை கடற்படை இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும் மாயமான கடற்றொழிலாளரை மீட்க முடியவில்லை. தொடர்ந்து இன்றைய தினம் தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்."என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |