படகு விபத்திலிருந்து மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த இந்திய அதிகாரி
யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பகுதியில் இலங்கை கடற்படை படகுடன் மோதியபோது கவிழ்ந்த படகில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு கடற்றொழிலாளர்களை, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சந்தித்துள்ளனர்.
இதன்போது அவர்களின் நலம் குறித்து விசாரித்த, இந்திய தூதரக அதிகாரி சாய் முரளி அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
அத்துடன் அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பங்களுக்கு தொலைபேசி அழைப்புகளையும் தூதரக அதிகாரிகள் ஏற்படுத்திக்கொடுத்தனர்.
இலங்கை கடற்படை கப்பல் விபத்து
முன்னதாக, கச்சத்தீவுக்கு வடக்கே 5 கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்படை கப்பல் ஒன்றும் இந்திய மீன்பிடி படகு ஒன்றும் நேற்று வியாழக்கிழமை மோதி விபத்துக்குள்ளாகின.
இதன்போது கப்பலில் இருந்த நான்கு இந்தியர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காணாமல் போயுள்ளதுடன், இரண்டு பேர் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |