2024 ஜனாதிபதி தேர்தலில் நீண்ட வாக்குச்சீட்டு
2019 ஆம் ஆண்டு தேர்தலில் அச்சிடப்பட்டதை விட 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நீண்ட வாக்குச்சீட்டு அச்சிடப்படுவதாக தேசிய தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
இம்முறை தேர்தலில் 39 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதால், வாக்குச்சீட்டு 2019 ஆம் ஆண்டு தேர்தலை விட நீளமாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணையாளர் ரத்நாயக்க கூறியுள்ளார்.
படைப்பாளிகளுக்கு அச்சுறுத்தலாகிய மாறிய இலங்கை அரசாங்கம்: சர்வதேசத்திடம் தீபச்செல்வன் முன்வைத்துள்ள கோரிக்கை
அரச அச்சகம்
இந்த நிலையில், தேசிய தேர்தல் ஆணையகம் விரைவில் வாக்குச்சீட்டின் அளவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச்சீட்டுகள், அச்சிடுவதற்காக அரச அச்சகத்திடம் இன்று கையளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதி தேர்தல் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் திகதி காலை 07.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |