சவூதி அரேபியாவுடனான நீண்டகால உறவுகள் வலுவாக மேம்படும்: இலங்கை
சவூதி அரேபியாவுடனான நீண்டகால உறவுகள் வலுவாக மேம்படும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை தெரிவித்துள்ளது.
நேற்றைய தினம் (27.02.2023) வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, சவூதி தூதுக்குழுவினரை சந்தித்த பின்னர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் கடந்த மாதம் ஐக்கிய ராஜ்யத்திற்குப் பயணம்செய்தார். அதன்போது இரண்டு நாடுகளுக்கிடையேயான பொருளாதார மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து சவூதி இளவரசர் பைசல் பின் ஃபர்ஹானுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
அபிவிருத்தி கடன்
இந்தநிலையில், நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்தின்போது, இலங்கையில் திட்டங்களுக்குத் தொடர்ந்து நிதி உதவி வழங்குவதாகச் சவூதி அரசு உறுதியளித்துள்ளது.
இதுவரை, இலங்கைக்கு 425 மில்லியன் டொலர் மதிப்புள்ள குறைந்தது 15 அபிவிருத்தி கடன்களைச் சவூதி வழங்கியுள்ளது.
அத்துடன், கிழக்கு இலங்கையில் ஒரு பாலம் நிர்மாணிக்க 5.4 மில்லியன் டொலர்களை சவூதி வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
