கொழும்பின் புறநகர் பகுதிகளில் நீண்ட எரிபொருள் வரிசைகள்
கொட்டாவை, மகரகமை, ஹோமாகமை உட்பட கொழும்பின் புறநகர் பகுதிகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு எதிரில், வாகனங்களுக்கு டீசலை நிரப்புவதற்காக நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.
அத்துடன் பெட்ரோலை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசைகளில் நிற்கின்றனர். இதன் காரணமாக நாவின்ன, விஜேராம, ஹைலெவல் வீதிகளில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை ஹட்டன், கொட்டகலை நகரங்களில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு மூன்று தினங்களுக்கு பின்னர் இன்று 6 ஆயிரத்து 600 லீற்றர் டீல் கிடைத்துள்ளது.
அதனை தமது வாகனங்களுக்கு நிரப்ப வாகன உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
ஹட்டன் நுவரெலியா வீதியில் நேற்றிரவு முதல் சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் வரை வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
