லண்டனில் இருந்து 211 பயணிகளுடன் சிங்கப்பூர் சென்ற விமானத்திற்கு நேர்ந்த கதி! பலர் படுகாயம்
லண்டனில் (London) இருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Singapore Airlines) விமானமான போயிங் 777-300ER விமானம் பாரிய சுழலில் சிக்கியதால் ஒருவர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்துள்ளனர்.
குறித்த விமானம், வங்காள விரிகுடாவை கடந்த சில நிமிடங்களில் 6,000 அடி (2,000 மீ) தாழ்வாக பறந்துள்ளதாக விமான கண்காணிப்பு தரவு தெரிவித்துள்ளது.
மொத்தம் 211 பயணிகளுடனும் 18 பணியாளர்களுடனும் பயணித்த விமானமே இவ்வாறு சுழலில் சிக்கியுள்ளது.
பாங்காக்கில் தரையிறங்கிய விமானம்
இதனையடுத்து, விமானம் பாங்காக்கில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Aftermath of Singapore Airlines Flight 321 from London to Singapore, which diverted to Bangkok due to severe turbulence. Two passengers dead, several injured. Blood everywhere, cabin destroyed. #singaporeairlines #sq321 pic.twitter.com/sr4nTSIkZn
— Rudra ? (@invincible39) May 21, 2024
இந்த விபத்தில் உயிரைிழந்தவர் 73 வயதுடைய பிரித்தானியாவைச்சேர்ந்த வயோதிபர் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன்போது உயிரிழந்த நபரின் குடும்பத்திற்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் 30 பேர் காயம் அடைந்ததாகத் தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்தாலும், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் எத்தனை பேர் காயமடைந்தனர் என்பதைக் குறிப்பிடவில்லை.
விபத்து தொடர்பான ரேடார் பதிவுகளில், விமானம் 37,000 அடி உயரத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது மூன்று நிமிடங்களில் 31,000 அடிக்குக் கீழே இறங்கியுள்ளது.
பின் அங்கிருந்து வேகமாக இறங்கி அரை மணி நேரத்திற்குள் பாங்காக்கில் (bangkok)தரையிறங்கியது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானங்கள் இதுவரை இதுவரை மொத்தம் ஏழு விபத்துகளைச் சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
You My Like This Video
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |