லண்டனை உலுக்கிய ஆசிரியை கொலை சம்பவம்! சிசிடிவி காட்சியில் சிக்கிய சிவப்பு மர்ம பொருள்
லண்டனை உலுக்கிய 28 வயது ஆசிரியை கொலை சம்பவத்தில், அவர் எந்த பொருளால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது குறித்து புலனாய்வாளர்கள் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளனர்.
28 வயதான ஆரம்பப்பள்ளி ஆசிரியை சபீனா நெஸ்ஸா (Sabina Nessa) கடந்த செப்டம்பர் 17-ஆம் திகதி தென்கிழக்கு லண்டனில் தனது குடியிருப்பில் இருந்து, அருகிலுள்ள Cator பூங்காவில் அவர் படுகொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அந்த பகுதியில் பணி முடித்துவிட்டு நடைபயிற்சிக்கு சென்ற சபீனா நெஸ்ஸா என்ற பெண் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
அவரது உடல் அடுத்த நாள் பூங்காவிற்கு செல்லும் சில பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது, அவரது சடலம் இலைகளின் குவியலின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் பிரித்தானியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, சமீபத்திய நாட்களில் நடந்த கொலையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 2 பேரை, பொலிஸார் மீண்டும் கைது செய்து விசாரணை செய்தனர்.பின்னர் அவர்கள் இருவரும் விசாரணையின் கீழ் விடுவிக்கப்பட்டனர்.
அதன் பிறகு, நெஸ்ஸா தாக்கப்பட்ட இடத்துக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த கமராவின் பதிவிலிருந்து கிடைத்துள்ள புதிய சிசிடிவி காட்சி ஆதாரங்களின் அடிப்படையில், பொலிஸார் மூன்றாவதாக ஒரு சந்தேகநபரை தேடி வருகின்றனர். அந்த நபர் மீதே முழு சந்தேகமும் இருப்பதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
பொலிஸாரிடம் கிடைத்துள்ள 12-வினாடி சிசிடிவி காணொளியை ஆராய்ந்ததில் அதில் ஒருவர் கையில் வைத்திருக்கும் ஒரு மின்னக்கூடிய சிகப்பு நிறப் பொருளைப் மறைக்க முயல்வதும் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், அந்த காட்சியை மேலும் ஆராய்ந்து பார்த்த புலனாய்வாளர்கள், அந்த மர்ம பொருள் ஒரு குளிர்பான கேனாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த கேனை வைத்து சபீனா நெஸ்ஸா அடித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.








கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
