சர்வதேச சட்டத்தை மீறும் உரிமை இஸ்ரேலுக்கு இல்லை: பிரித்தானியாவில் இருந்து எழுந்த கண்டனம்
சர்வதேச சட்டத்தை மீறும் உரிமை இஸ்ரேலுக்கு இல்லை என லண்டன் மேயர் சாதிக் கான் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுவரும் நிலையில், இதுவரை போர் நிறுத்தம் குறித்த எந்தவொரு முன்னெடுப்புகளும் ஆக்கப்பூர்வமாக எடுக்கப்படவில்லை என கவலை வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த போர் நடவடிக்கையில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா, ஜேர்மனி, பிரித்தானியா, கனடா போன்ற மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
பதிலடி தாக்குதல்
அதே சமயம் பாலஸ்தீனத்திற்கு ஈரான், லெபனான், சிரியா, சவுதி, ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இதன்படி இஸ்ரேலின் பதிலடி தாக்குதலுக்கு பிரித்தானியா முழு ஆதரவு வழங்கி இருக்கும் நிலையில் லண்டன் மேயர் சாதிக் கான், சர்வதேச சட்டத்தை மீறும் உரிமை இஸ்ரேல் உட்பட எந்தவொரு நாட்டிற்கும் இல்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த போரால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசாவில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
மேலும் மனிதாபிமான நெருக்கடி மோசமடைந்து வருவதால் நான் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கிறேன் எனவும் லண்டன் மேயர் சாதிக் கான் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்



