லண்டனில் பட்டப்பகலில் கத்திக் குத்து - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி
கிழக்கு லண்டனில் பட்டப்பகலில் கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் 4 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லீஸ்வுட் டிரைவ், நியூபரி பார்க், இல்ஃபோர்டில் பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து அந்த பகுதிக்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் போது கத்தியால் குத்தப்பட்ட நபர் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், அவரது நிலை குறித்த தகவல்கள் தெரியவில்லை.
சம்பவ இடத்திலேயே சிகிச்சையளிப்பு
"நாங்கள் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் குழுவினர், மருத்துவர் மற்றும் பதிலளிப்பு அதிகாரி உள்ளிட்ட பலரை அனுப்பியதாக லண்டன் ஆம்புலன்ஸ் சேவையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளனர்.
லண்டனின் ஏர் ஆம்புலன்ஸில் துணை மருத்துவர் மற்றும் வைத்தியரைக் கொண்ட குழுவையும் நாங்கள் அனுப்பினோம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சம்பவ இடத்தில் அந்த நபருக்கு சிகிச்சை அளித்தோம்." தொடர்ந்தும் மேலதிக சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.