லண்டன் வாழ் தமிழர்களுக்கு எச்சரிக்கை! 25000 பவுண்ட் இழந்த பெண்
பிரித்தானியாவில் தமிழர்களை இலக்கு வைத்து கொள்ளை கும்பல் ஒன்று செயற்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் லண்டன் சவுத்ஹோல் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் 25 ஆயிரம் பவுண்ட்ஸ் பெறுமதியான தங்க நகைகளை பறி கொடுத்துள்ளார்.
குறித்த பெண்மணி அந்தப் பகுதியிலுள்ள மெற்றோ வங்கிக்கு சென்று அங்குள்ள பெட்டகத்தில் வைத்திருந்த தங்க நகைககளை எடுத்து வந்துள்ளார்.
நகை கொள்ளை
கொண்டாட்ட நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக அதிகளவான நகைகளை எடுத்து வந்துள்ளார்.
நகையுடன் கார் பார்க்கிற்கு வந்த பெண்மணி தனது கைப்பையை காரினுள் வைத்த நிலையில், வீடு செல்வதற்கு தயாராகி உள்ளார்.
இந்நிலையில் அங்கு வந்த நபர் ஒருவர் கார் கண்ணாடியை தட்டி உங்கள் பணம் கீழே விழுந்து கிடப்பதாக தெரிவித்துள்ளார்.
கொள்ளையர்களின் சூழ்ச்சியை அறியாத குறித்த பெண்மணி காரை விட்டு இறங்கி அது தனது பணம் இல்லையென தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்
அந்த சில நொடிப்பொழுதிகளில் காரின் மற்றைய பக்கமாக வந்த மற்றுமொரு திருடன் நகையுடன் இருந்த கைப்பையை களவாடிக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்மணி சுகாதாகரிப்பதற்குள் குறித்த இருவரும் வாகனம் ஒன்றில் தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வாறான மோசடிகள் பிரித்தானியாவில் பல பகுதிகளில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பல தமிழர்களும் பணம் மற்றும் நகைகளை இழந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 7 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

திடீரென சீதா-அருண் கல்யாணத்தை நிறுத்திய முத்து, பதற்றத்தில் குடும்பம், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
