லொஹானின் அமைச்சு பதவியேற்பு நீதியை மீண்டும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது: சபா குகதாஸ்
லொஹானின் அமைச்சு பதவியேற்பு நீதியை மீண்டும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
''இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தக்கு ஏற்கனவே இருந்த இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் கைத்தொழில் விடயதனங்களுக்கு மேலதிகமாக களஞ்சிய வசதிகள், கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள், படகு மற்றும் கப்பற்றொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு ஜனாதிபதியால் இன்று வழங்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் லொஹான் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சராக இருந்த போது மதுபோதையில் அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று தமிழ் அரசியல் கைதி ஒருவரை அழைத்து தனது கைத்துப்பாக்கியைக் கைதியின் தலையில் வைத்து தனது சப்பாத்தை நாக்கால் நக்குமாறு பணித்தார்.
அத்துடன் இழிவான வார்த்தைகளால் பேசிய ரத்வத்த தொடர்பான நீதித்துறை விசாரணை நடவடிக்கை முடிவில்லாமல் தொடரும் போது மீண்டும் அமைச்சுப் பதவி வழங்கப்பட்டமை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைப்பதற்கு வாய்ப்பில்லை என்பதை மீண்டும் மீண்டும் உறுதி செய்கின்றது.
மனித உரிமைப் பேரவையில் சிறிலங்காவின் நீதி அமைச்சரும் வெளி விவகார அமைச்சரும்
உள்ளக பொறிமுறையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதாகக் கூறிய
வாக்குறுதி ஏமாற்று என்பதை லொஹானின் பதவி ஏற்பு வெளிப்படுத்தியுள்ளது'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.





இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
