லொஹான் ரத்வத்தை மீண்டும் பொதுஜன பெரமுணவில்..
முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே(Lohan Ratwatte), மீண்டும் பொதுஜன பெரமுண கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் கண்டி, மஹிய்யாவ பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று(11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
பொதுஜன பெரமுண கட்சி
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
கடந்த தேர்தல்களில் திசைகாட்டிக்கான மக்கள் ஆதரவு அலை வீசியது. அதன் காரணமாக வேறு கட்சிகளில் இருந்தவர்களும் திசைகாட்டிக்கு வாக்களிக்கும் நிலைக்குத்தள்ளப்பட்டார்கள்.
அவ்வாறான நிலையில் நான் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டேன். மற்றபடி கட்சியை விட்டு ஒதுங்கிக் கொள்ளவில்லை.
எதிர்வரும் தேர்தல்களில் பொதுஜன பெரமுண கட்சி ஊடாக மீண்டும் போட்டியிடுவேன் என்றும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |