முன்னர் வழங்கப்பட்ட ஒப்புதல்களின்படி செயற்பட விருப்பம் வெளியிட்டுள்ள அதானி நிறுவனம்
484 மெகாவோவாட் காற்றாலைப் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திட்டம் தொடர்பாக, இலங்கை அரசாங்கத்தினால், முன்னர் வழங்கப்பட்ட ஒப்புதல்களின்படி செயல்படத் தயாராக இருப்பதாக, அதானி கிரீன் எனர்ஜி இலங்கை லிமிடெட், இலங்கையின் எரிசக்தி அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கான கட்டணத்தை, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இலங்கை அரசு அங்கீகரிக்கும் வரை, பொறுமையாகக் காத்திருந்ததாகவும், அதானி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அதானி நிறுவனம்
இருப்பினும், எந்தவொரு முறையான தகவல் தொடர்பும் இல்லாத நிலையில், திட்டத்திலிருந்து விலக முடிவு செய்ததாகவும் அது கூறியுள்ளது.
இந்த நிலையில், இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பரிமாற்றத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்த எப்போதும் தயாராக இருப்பதாக அதானி கிரீன் எனர்ஜி இலங்கை லிமிடெட் தெரிவித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்துடன், இந்த அல்லது வேறு எந்த அபிவிருத்தி வாய்ப்பையும் மேற்கொள்ள எப்போதும் தயாராக இருப்பதாக அதானி கிரீன் எனர்ஜி இலங்கை லிமிடெட் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுவே, இலங்கைக்கும் அதானி கிரீன் எனர்ஜி இலங்கை லிமிடெட் நிறுவனத்துக்கும் நன்மை தரும் என்றும் அதானி கிரீன் எனர்ஜி இலங்கை லிமிடெட் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |