கண்டவுடன் கைது! தேசபந்துவுக்கு பகிரங்க பிடியாணை
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை காணும் இடத்தில் வைத்து கைது செய்யுமாறு பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை நீதவான் நீதிமன்றம் இந்த பிடியாணையைப் பிறப்பித்துள்ளது.
பகிரங்க பிடியாணை
2023ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறையில் உள்ள ஹோட்டல் முன்பாக நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கடந்த மாதம் 28ஆம் திகதி முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு மாத்தறை நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து தேசபந்து தென்னக்கோனுக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது.
எனினும், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக தேசபந்து தென்னக்கோன் தற்போது தலைமறைவாக உள்ளார்.
இந்தநிலையில், காணும் இடத்தில் அவரைக் கைது செய்வதற்கான பகிரங்க பிடியாணையை மாத்தறை நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
ஜீ தமிழில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த மனசெல்லாம் சீரியல் முடிவுக்கு வந்தது... கிளைமேக்ஸ் காட்சி இதோ Cineulagam
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan