முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் துப்பாக்கிச்சூட்டால் பலி
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளராக கடமையாற்றிய ஒருவர், கட்டுகஸ்தோட்டையில் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் இன்று (20) உயிரிழந்துள்ளார்.
இவர், லொஹான் ரத்வத்தவுக்கு சொந்தமான அலுவலகத்தின் அருகில் உள்ள வீடொன்றில் துப்பாக்கிச்சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
இதனை தொடர்ந்து, கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் இன்று (20) உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, குறித்த நபர் தாக்கப்பட்டு இருந்த இடத்தில் துப்பாக்கி ஒன்று காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிலையில் அவர் சுட்டு கொலை செய்யப்பட்டாரா அல்லது தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்து கொள்ள முயற்சித்துள்ளாரா என பொலிஸார் சந்தேகம் எழுப்பியுள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 19 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
