மீள் அறிவித்தல் வரையில் ஒரு கிராம சேவகர் பிரிவு முழுமையாக முடக்கப்பட்டது!
மாதம்பை – மரக்கலகம கிராம சேவகர் பிரிவு மறு அறிவித்தல் வரும் வரை தனிமைப்படுத்தப்பட்டது. மாதம்பை பொது சுகாதார ஆய்வாளர் அலுவலகத்தின் நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் குலரத்ன அத்தபத்து இதை தெரிவித்தார்.
இப்பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பலர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் இன்று 22 நோயாளிகள் அடையாளம் காணப்பட்ட நிலையில், இந்த இடத்தை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இன்றைய தினம் மாத்திரம் நாட்டில் 2,419 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, இலங்கையில் மொத்த கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 230,675 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மொத்த கோவிட் தொற்றாளர்களில் 194,145 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 19 மணி நேரம் முன்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri