யாழ். மாவட்ட செயலகத்தின் இரு கிளைகளுக்கு பூட்டு - பலர் தனிமைப்படுத்தலில்
யாழ். மாவட்ட மேலதிக அரச அதிபர் ம.பிரதீபனுக்குக் கோவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மாவட்ட செயலகத்தின் இரு கிளைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன.
அத்துடன் 22 பேருக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யாழ். மாவட்ட செயலகத்தின் நிர்வாகக் கிளை மற்றும் ஸ்தாபனக் கிளை ஆகிய பகுதிகளே முழுமையாக இழுத்து மூடப்பட்டு இங்கு பணியாற்றும் சகல பணியாளர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மாவட்ட மேலதிக அரச அதிபருடன் நெருங்கிப் பணியாற்றியவர்களிடம் இன்று பெறப்பட்ட மாதிரிகளின் பெறுபேற்றின் அடிப்படையில் மாவட்ட செயலகத்தின் பல கிளைகளின் உத்தியோகத்தர்களுக்குப் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்வது தொடர்பில் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தில் 450 இற்கும் மேற்பட்ட ஊழியர்கள்
பணியாற்றுகின்றபோதும் இன்று 100 பேர் மட்டுமே பணிக்குச் சமூகமளித்திருந்தனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 12 மணி நேரம் முன்
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam