சௌபாக்கியா பற்றிக் உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையம் யாழில் திறந்து வைப்பு(Video)
சௌபாக்கியா பற்றிக் உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையம் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் "சுபிட்சத்தின் நோக்கு" கொள்கைத்திட்டத்தின் படி நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் "என் கனவு யாழ்" எண்ணக்கருவில் குறித்த விற்பனை நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
திறப்பு விழா நிகழ்வில் பற்றிக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு விற்பனை நிலையத்தினை திறந்து வைத்துள்ளார்.
நிகழ்வில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் அங்கஜன் இராமநாதனின்,
யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர்
எஸ்.சுதர்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri