மன்னாரில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பில் மன்னார் மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு மன்னாரில் நடைபெற்றுள்ளது.
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட தலைமை அலுவலகத்தில் குறித்த நிகழ்வு இன்று (3) நடைபெற்றுள்ளது.
இதன்போது, மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து உள்ளூராட்சி மன்றங்களிலும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் மற்றும் விகிதாசார உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது சத்திய பிரமாணத்தை மேற்கொண்டனர்.
சத்தியப்பிரமாணம்
தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ கட்சியின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் நானாட்டான் பிரதேச சபையின் சுயேட்சைக்குழு சார்பாக போட்டியிட்ட ஜி.எம்.சீலன் தலைமையிலான குழுவினரும் ஆதரவு தெரிவித்து வருகை தந்ததோடு அவர்களது உறுப்பினர்களும் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
சத்தியபிரமாண நிகழ்வில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எஸ்.ஆர் குமரேஸ்,புளொட் அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் ஜேம்ஸ்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் ஜோன்சன்,சுயேட்சை குழுவின் தலைவர் ஜி.எம்.சீலன்,ஆகியோர் கலந்து கொண்டதோடு,அவர்கள் முன்னிலையில் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |











தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 10 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
