ஆற்றில் குதித்து தவறான முடிவெடுத்த மாணவி! பொலிஸாரின் விசாரணையில் சிக்கிய நால்வர்
குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் பகிடிவதை காரணமாக ஆற்றில் குதித்து தவறான முடிவெடுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு தவறான முடிவெடுத்த மாணவி பொது மக்களால் காப்பாற்றப்பட்டு, தற்போது குளியாப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிடிவதை சம்பவம்
இதன்படி, பகிடிவதை சம்பவம் தொடர்பாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை பொலிஸார் நடத்திய விசாரணையில், பகிடிவதை கொடுக்கப்பட்ட சம்பவத்தால் அவர் தற்கொலைக்கு முயன்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தவறான முடிவெடுத்த மாணவி, தொழில்நுட்பக் கல்லூரிக்கு அருகிலுள்ள ஆற்றில் நேற்று (02) மதியம் குதித்ததாகவும், அருகில் இருந்த சிலரால் அவர் மீட்கப்பட்டு குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இதேவேளை மாணவியின் நிலைமை மோசமாக இல்லை என்று வைத்தியசாலை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த மாணவிக்கு பகிடிவதை வழங்கிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவர்களிடம் ,குளியாப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஈரான் - அமெரிக்க போரில் புதிய திருப்பம்! போர்க்களத்தில் இறங்கப்போகும் உக்ரைன் ரோபோக்கள் (காணொளி) News Lankasri
12 ஆண்டுகளுக்கு முன் கோமாவிற்கு சென்ற உலக சாம்பியன் ஷூமேக்கர் - உடல் நிலையில் முன்னேற்றம் News Lankasri