உள்ளுராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் விரைவில் உள்ளுராட்சி மன்றத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உயர் நீதிமன்றின் தீர்ப்பிற்கு அமைய இந்த தேர்தல் விரைவில் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதிப்பற்றாக்குறை
கடந்த ஆண்டு மார்ச் மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்டிருந்தன.
எனினும், போதியளவு நிதி இல்லாத காரணத்தினால் அரசாங்கம் தேர்தலை நடத்தவில்லை.
இந்த விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் போது அரசாங்கம் தேர்தலை நடத்தாமை தவறான செயல் என நீதிமன்றம் அறிவித்திருந்ததுடன் உடன் தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் உத்தரவிட்டிருந்தது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri