இங்கிலாந்து போல நாடு முன்னேறிவிட்டது: ரணில் விக்ரமசிங்க கிண்டல்
பொது மக்கள் வாக்களிப்பதில் ஆர்வம் இன்றி இருப்பதில் இங்கிலாந்து போல இலங்கையும் முன்னேறிவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ரோயல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கைச் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வாக்களிக்கும் ஆர்வம்
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் ஆர்வம் பொதுமக்களிடம் இல்லை. கணிசமான பொதுமக்கள் வாக்களிக்க வரப் போவதில்லை.
முக்கியமான சில வேட்பாளர்கள் இருக்கும் பிரதேசங்களில் வாக்களிப்பு வீதம் சற்று அதிகரிக்கலாம். ஆனால் ஏனைய இடங்களில் வாக்களிப்பு மந்தமாகவே இருக்கும்.
நாட்டு மக்கள் வாக்களிப்பது குறித்து அந்தளவுக்கு ஆர்வம் அற்றுப் போயிருக்கின்றார்கள். அந்த வகையில் நம் நாடும் இங்கிலாந்தைப் போன்று முன்னேறிவிட்டது என்றும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |