தேர்தல் காரணமாக பொருளாதார நெருக்கடி தீவிரமடையும்: நிதி அமைச்சின் செயலாளர்
தேர்தல் காரணமாக நாட்டின் பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடையும் என நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலை தடை செய்ய உத்தரவு பிறப்பிக்கக் கோரி, ஓய்வுப்பெற்ற இராணுவ கேர்ணல் தாக்கல் செய்த நீதிப்பேராணை மீதான விசாரணையின் போதே நிதி அமைச்சின் செயலாளர் இக்கருத்தினைத் கூறியுள்ளார்.

நிதி திரட்டுவது சவால்
அத்தியாவசிய சேவைகளுக்கான நிதியைக் கூட செலுத்த முடியாத நிலையில், தேர்தலுக்கான நிதியை திரட்டுவது திறைசேரிக்கு கடும் சவாலான விடயம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச கடன் தரப்படுத்தலில் இலங்கை பின்னிலையில் உள்ளதால் சர்வதேச சந்தையில் இருந்து நிதி பெறுவது சிரமமான விடயம் என செயலாளர் உயர்நீதிமன்றத்திற்கு விளக்கமளித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam