ஏழு தடவைகள் தோல்வியில் முடிந்த அரசாங்கத்தின் முயற்சிகள்!
உள்ளூராட்சித் தேர்தலை தடுப்பதற்கு அரசாங்கம் 7 முறை முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவை அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (23.01.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,“உள்ளூராட்சித் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை.
தேர்தலின் நோக்கம் என்ன...!
தேர்தல் தினத்தை பெயரிடும் போது ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அனைவரும் அங்கு இல்லை என்ற வாதத்தை அரசாங்கம் எழுப்புவது தவறு.
தேர்தல் ஆரம்பமாகியுள்ள நிலையில் புதிய ஆணைக்குழுவை நியமிக்க முற்பட்டால் அது அரசியல் நெறிமுறைகளுக்கு பொருந்தாது.
உள்ளூராட்சி உறுப்பினர்களை நியமிப்பது ஒன்றே இத்தேர்தலின் நோக்கமல்ல, அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாட இதுவே சிறந்த சந்தர்ப்பம்.”என சுட்டிக்காட்டியுள்ளார்

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
