மக்களுக்கு உணவில்லை என்று கூறி தேர்தலை ஒத்திப்போட முடியாது! ஹேஷா விதானகே
தேர்தலை நடத்துவது ஜனநாயக உரிமை, மக்களுக்கு உண்பதற்கு உணவில்லை என்று கூறி தேர்தலை ஒத்திப்போட நடவடிக்கை எடுப்பதை ஏற்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் ஒத்திவைக்கும் என்று வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் உண்பதற்கு உணவில்லாத நிலையை உருவாக்கியவர்கள் தான் மக்களுக்கு உணவு வழங்குவது பற்றிப் பேசுகின்றார்கள்.
மிக விரைவில் வெளியிடப்படவுள்ள பெயர்கள்
அவர்கள்தான் இப்போதும் மக்களைச் சுரண்டிக் கொண்டு - கொள்ளையடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். மிக விரைவில் அவர்களின் பெயர்களை வெளியிடுவோம்.
மக்கள் முன் அம்பலப்படுத்துவோம். அரசாங்கம் பிச்சையெடுத்துக் கொண்டு இருக்கின்றது. அப்படிப் பிச்சையெடுக்கும் அரசாங்கத்தில் கூட திருடுகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் - அமைச்சர்கள் உள்ளனர்.
சரியான தகவலுடன் மக்கள் முன் அவர்களை அம்பலப்படுத்துவோம். இவர்கள் தேர்தலை ஒத்திப்போடுவதற்காக பொய்யாகக் காரணம் தேடுகின்றனர். அப்படி என்றால் இந்தத் திருடர்களை பிடித்துக் காட்டுங்கள்.
இது தேர்தல் தோல்வி பயமே அன்றி வேறில்லை. பயம் இல்லை என்று
காட்டுவதற்காகத் தான் முதன்முதலாக ஓடிச் சென்று தேர்தலுக்குக் கட்டுப்பணம்
செலுத்தியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

புதிய சாதனை படைத்த அனிருத்தின் சென்னை இசை நிகழ்ச்சி.. 45 நிமிடத்திற்குள் அனிருத்தின் #Hukum புதிய சாதனை Cineulagam

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
