அரச அதிகாரிகளுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
அரச அதிகாரிகளுக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கத்தவறுவது தண்டனைக்குரிய குற்றம் எனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்குவது அரச உத்தியோகத்தர்களின் கடமையாகும் எனவும் தெரிவித்துள்ளது.
தேர்தல் பின்னணி
திறைசேரியின் செயலாளர், அரச அச்சகர் மற்றும் ஏனைய அரச அதிகாரிகள், நிறுவனங்களின் செயற்பாடுகளின் மூலம் தேர்தலை சீர்குலைக்க எடுத்து வரும் முயற்சிகள் அம்பலமாகின்றது என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்து தேர்தல்களையும் நடாத்துவது இலங்கை ஜனநாயக முறைமையின் ஓர் முக்கியமான அம்சமாகும் என தெரிவித்துள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலை சீர்குலைப்பதற்கு அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகள் குறித்து அதிருப்தி வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கம் செலவு குறைப்பு செய்வதாக எடுத்த சில நடவடிக்கைகள் தேர்தலை நடத்துவதற்கு முட்டுக்கட்டையாக மாறியுள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பாரதி கண்ணம்மா, கல்யாணம் முதல் காதல் வரை குழந்தை நட்சத்திரங்களை நியாபகம் இருக்கா?... எப்படி உள்ளார்கள் பாருங்க, வீடியோ Cineulagam

சிறுவயதில் முத்துவிற்கு என்ன ஆனது, மனோஜ் என்ன செய்தார்... சிறகடிக்க ஆசை சீரியல் ஷாக்கிங் புரொமோ... Cineulagam
