வாக்குச்சீட்டு அச்சிடுதல் தடைப்பட்டமைக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்க வேண்டும்! பெபரல்
வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் நடவடிக்கை தடைப்பட்டமைக்கான பொறுப்பினை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென பெபரல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
வாக்குச்சீட்டு அச்சிடுவதற்கான செலவுகள் வழங்கப்படும் வரையில் அவற்றை அச்சிடுவதில்லை என்ற தீர்மானம் வரலாற்றில் முதல் தடவையாக எடுக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுயாதீனத்தன்மை அற்றுப் போயுள்ள தேர்தல் ஆணைக்குழு நிதி
இதற்கு முன்னர் நடைபெற்ற அநேக தேர்தல்களின் போது அரச நிறுவனங்கள் தேர்தல் ஆணைக்குழுவுடன் சுமூகமாக செயற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிற்கொடுப்பனவு அடிப்படையில் கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவின் நிதி சுயாதீனத்தன்மை அற்றுப் போயுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பொருளாதார நெருக்கடிகளை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைத்தால் எதிர்வரும் காலங்களில் ஆட்சி பீடம் ஏறும் அரசாங்கங்கள் இதனையே காரணம் காட்டி நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களை ஒத்தி வைக்கும் சாத்தியம் உருவாகும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan