புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி வேட்புமனு கையளிப்பு (Photos)
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி, அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேசசபையில் சுயேட்சையாகக் களமிறங்கும் முகமாக இன்றைய தினம் (19.01.2023) வேட்புமனு கையளித்துள்ளது.
முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களினால் அமைக்கப்பட்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் காரைதீவு பிரதேச சபையில் சுயேட்சையாகக் களமிறங்கவுள்ளார்.
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள்
கடந்த சனிக்கிழமை சுயேட்சைக் குழுவுக்கான கட்டுப் பணம் செலுத்தப்பட்ட நிலையில், இன்றைய தினம் (19.01.2023) அம்பாறை மாவட்ட செயலகத்தில் வேட்புமனு கையளிக்கப்பட்டது.
இதன்போது புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் கந்தசாமி இன்பராசா, முதன்மை வேட்பாளர் செல்வநாயகம் ரசிகரன் மற்றும் கட்சி சார்பான வேட்பாளர்களும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

முழுசா 10 ஆண்டுகளுக்கு பின் வரும் சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அதிஷ்டம் எந்த ராசிகளுக்கு? Manithan
