உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் தேசிய மக்கள் சக்திக்கான சட்டத்தரணிகள் விடுத்துள்ள எச்சரிக்கை
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தைப் போன்று அரசியல் அதிகாரங்களும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளும் உயர் நீதிமன்றத்தின் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என தேசிய மக்கள் சக்திக்கான சட்டத்தரணிகள் இன்று எச்சரித்துள்ளனர்.
சட்டத்தரணி சுனில் வட்டகல செய்தியாளர் மாநாட்டில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்கும் நடவடிக்கைகளின் பின்னணியில் அமைச்சர்கள், அமைச்சரவை, அரசியல் அதிகாரம் மற்றும் ஐந்து அரசாங்க அதிகாரிகளும் உள்ளனர்.
ஒத்திவைப்பு தீர்மானங்கள்
அரசியல் அதிகார சபையினால் எடுக்கப்படும் ஒத்திவைப்புத் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு, பொலிஸ் மா அதிபர், திறைசேரி செயலாளர், சட்டமா அதிபர், அரச அச்சகர் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் ஆகிய ஐந்து அரச அதிகாரிகளே இதற்குப் பொறுப்பானவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக அண்மையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தீர்ப்பின் போது, பொது மக்கள் மீதான தங்கள் பொறுப்பை நிறைவேற்றத் தவறிய அரசியல் அதிகாரம் மற்றும் அரசாங்க அதிகாரிகள் மீது உயர் நீதிமன்றம் சிறந்த தீர்ப்பை வழங்கியது.
இந்த உயர்நீதிமன்றத் தீர்ப்பு, உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைத்ததற்குக்
காரணமானவர்களுக்கும் பொருந்தும். தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கைகள்
கடுமையான குற்றமாகும் என்றும் சட்டத்தரணி வட்டகல குறிப்பிட்டுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
