ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை : எம்.ஏ.சுமந்திரன்
யாழ்ப்பாணத்தில் நேற்று(15.01.2023) இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் (16.01.2023) உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே சுமந்திரன் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எங்களுக்கு நம்பிக்கை இல்லை
எந்த காலப்பகுதிக்குள் காணிகள் விடுவிக்கப்படும் என சொல்லவில்லை, 108 ஏக்கர் காணி உடனடியாக விடுவிக்கப்படலாம் என சொல்லுகின்றார்கள்.
உடனடியாக விடுவிக்கப்படலாம் என பல நாட்களாக சொல்லுகின்றார்கள், ஆனால் இன்னும் விடுவிக்கப்படவில்லை.
அதனால் நேற்றைய கூட்டத்தில் சொல்லப்பட்ட விடயங்கள்
தொடர்பாக எங்களுக்கு பெரிதாக நம்பிக்கை இல்லை என இதன்போது தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
