உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: தமிழர் பகுதியில் அதிக வீதம் வாக்குப் பதிவு
2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குரிய வாக்குப் பதிவுகள் நாடளாவிய ரீதியில் இன்று இடம்பெற்ற நிலையில், மன்னார் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாடளாவிய ரீதியில் வழமையை விட குறைவான வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மன்னார் மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் பதிவாகியுள்ளமை சிறம்பம்சமாகும்.
நாடளாவிய ரீதியில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றதுடன் 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கு பதிவுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மன்னார்
மன்னார் நகர சபை ,மன்னார் பிரதேச சபை,நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய ஐந்து உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல் வாக்குப்பதிவுகள் இடம்பெற்றன.
இந்தநிலையிலே, மன்னார் நகர சபையில் 18 உறுப்பினர்களும்,மன்னார் பிரதேச சபையில் 23 உறுப்பினர்களும், நானாட்டான் பிரதேச சபையில் 19 உறுப்பினர்களும், முசலி பிரதேச சபையில் 19 உறுப்பினர்களும், மாந்தை மேற்கு பிரதேச சபையில் 24 உறுப்பினர்களும் உள்ளடங்களாக கட்சி மற்றும் சுயேற்சைக் குழு சார்பாக 103 உறுப்பினர்கள் போட்டியிட்டனர்.
இதனையடுத்து, 5 உள்ளூராட்சி மன்றங்களில் இருந்தும் 88 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |