கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவு
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று (19) நண்பகலுடன் நிறைவடைந்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்கும் செயற்பாடுகள் கடந்த 3 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது முடிவடைந்துள்ளது.
இந்தநிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
வேட்புமனு தாக்கல்
கடந்த 17 ஆம் திகதி முதல் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் உரிய மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், நேற்றைய தினம் மொத்தமாக 21 கட்சிகளும் 15 சுயேட்சை குழுக்களும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களின் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காதலி மற்றும் அவரது அம்மாவை ஒரே நேரத்தில் கர்ப்பமாக்கிய யூடியூபர்! சர்ச்சையை கிளப்பிய வீடியோ News Lankasri

விஜய் டிவியின் நீ நான் காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்... யார் அவர், வீடியோ பாருங்க Cineulagam

மருத்துவப் பணியை விட்டுவிட்டு முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற IAS அதிகாரி News Lankasri
