வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்களால் விபரீதம் - ஒருவர் கொடூரமாக கொலை
இரத்தினபுரியில் வீட்டின் உரிமையாளர் ஒருவர் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பெல்மடுல்ல பொலிஸ் பிரிவின் மெத்தேகங்கொட பகுதியிலுள்ள வீட்டை உடைத்து, பொருட்கள் திருடப்பட்ட நிலையில், வீட்டில் இருந்த ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் 58 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் நேற்று காலை கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வீட்டில் கொள்ளை
உயிரிழந்தவர் பிறவி குறைபாடுள்ளவர் எனவும் தனது சகோதரரின் வீட்டிற்கு அருகிலுள்ள அறையில் தனியாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
உயிரிழந்தவரின் சகோதரர் காலையில் விழித்தெழுந்தபோது, வீட்டின் முன்னால் உள்ள மரத்தில் உயிரிழந்த நிலையில் சகோதரர் கட்டப்பட்டிருந்தை கண்டுள்ளார்.
பிரேத பரிசோதனை
அவரது கைகள் மற்றும் கழுத்து துணியால் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன.
கொல்லப்பட்டவரின் அறையில் இருந்த தங்கம் மற்றும் பணம் காணாமல் போனதாக அவரது சகோதரர் முறைப்பாடு செய்துள்ளார்.
நீதவான் விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
