உள்ளூர் பால் உற்பத்தி நிறுவனமொன்றை விற்பனை செய்யும் முயற்சி இடைநிறுத்தம்
உள்ளூர் பால் உற்பத்தி நிறுவனமொன்றின் முந்தைய ஆட்சிக் காலத்தில், இடம்பெற்ற நிதி மோசடியை குறித்த நிறுவனத்தின் தலைவர் வெளிப்படுத்தியுள்ளார்.
ஊடகங்களுக்கு செவ்வியளித்துள்ள அவர்,
“இந்த நிதி மோசடிகள் காரணமாகவே நிறுவனத்தை இந்தியாவுக்கு விற்பனை செய்யப்பட அனைத்து நடவடிக்கைகளும் முன்னைய அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ளது.
501 பில்லியன் இழப்பு
எனினும், அந்த முயற்சி தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி நிறுவனத்தின் நான்கு தொழிற்சாலைகளும் பிற தொடர்புடைய சொத்துக்களும் 25 பில்லியன் ரூபாய்கள் என்ற அற்ப தொகைக்கு மதிப்பிடப்பட்டிருந்தது.
2023 ஆம் ஆண்டில் நிறுவனம் 501 பில்லியன் இழப்பைச் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டது.
விலை குறைப்பு
ஆனால் 2024 டிசம்பரில் அதனை 34 மில்லியன்களாக குறைக்க முடிந்துள்ளது.
நிறுவனத்தின் தயாரிப்புகளின் விலையை அதிகரிப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை மாறாக, சில தயாரிப்புகள் மீதான மதிப்பு கூட்டப்பட்ட வற் வரி நீக்கப்பட்டதால் விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
