யாழ்.மாவட்டம்! உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான தகவல்கள்
நாளை நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 17 சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு மாநகர சபை, 3 நகர சபைகள் மற்றும் 13 பிரதேச சபைகள் என்ற கட்டமைப்பில் உள்ளூர் அதிகார சபைகள் இருக்கின்றன.
வாக்களிப்பு
இந்தச் சபைகளில் உள்ள 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 3 ஆயிரத்து 519 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களிலிருந்து போட்டியிடுகின்றனர்.
யாழ். மாவட்டத்தில் மக்கள் தமது வாக்குகளை அளிப்பதற்காக 517 வாக்களிப்பு நிலையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன.
இதேநேரம் 4 இலட்சத்து 98 ஆயிரத்து 140 வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன் தேர்தல் கடமைகளுக்காக 6 ஆயிரத்து 320 அதிகாரிகளும், 1048 பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடமையாற்றவுள்ளனர்.
இதேநேரம் யாழ். மாவட்டத்தில் 243 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து ஏற்பாடு
தேர்தலுக்கான போக்குவரத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
இலங்கை போக்குவரத்துச் சபையின் 50 பேருந்துகளும், 143 தனியார் பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை இடம்பெயர்ந்து பருத்தித்துறை பிரதேசத்தில் வசிக்கும் வாக்காளர்களை ஏற்றி வருவதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு பகுதிகளுக்குக் கடற்படையினர் படகு போக்குவரத்து ஒழுங்களைச் செய்துள்ளனர்.





ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 19 மணி நேரம் முன்

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri
