இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சகோதரர் ஈ.பி.டிபி. கட்சியில் இணைவு!
ஈ.பி.டிபி. கட்சியில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சகோதரர் ஜேவி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் நடேசன் சுந்தேரசேன் ஆகியோர் அவர்களின் ஆதரவாளர்களுடன் இணைந்துள்ளதாக ஈ.பி.டிபி. கட்சியின் மட்டு. மாவட்ட அமைப்பாளர் தம்பிபிள்ளை சிவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
ஈ.பி.டிபி. கட்சியில் இனைந்தவர்களை அறிமுகம் செய்யும் ஊடக சந்திப்பு மட்டக்களப்பு கிழக்கு மாகாண ஊடக மன்றத்தில் இடம்பெற்ற போதே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
“அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தலைமையாக கொண்டு இயங்கிவரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சி வடக்கு கிழக்கில் வீணைச் சின்னத்தல் தேர்தலில் போட்டியிடும்.
இந்நிலையில் எமது கட்சிக்கு நீண்டகாலமாக ஜே.வி.பி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராகவும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சியின் முதன்மை வேட்பாளராக களமிறங்கிய ந. சுந்தேரேசன் அவரின் ஆதரவாளர்களுடன் ஈபி.டி.பி. கட்சியின் கொள்கையை ஏற்றுக்கொண்டு கட்சியில் இணைந்துள்ளார்.
அவ்வாறே இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் சகோதரரான சதாசிவம் மயூரன் மற்றும் இராஜாங்க அமைச்சரின் ஆதரவாக செயற்பட்ட இளைஞர்கள் கடந்த தேர்தலில் போட்டியிட்டவர்கள் சுஜேச்சைக் குழுக்களில் போட்டியிட்டவர்கள் கட்சியில் இணைந்துள்ளனர்.
எனவே எமது கட்சி ஒரு சுதந்திரமான கட்சி அனைவரும் வந்து இனைந்து செயற்படலாம் என்பதுடன் தற்போது இளைஞர்கள் இனைந்து வருகின்றதுடன் மாவட்டத்திலுள்ள 10 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதுடன் அனைத்து சபைகளையும் கைப்பற்றுவோம்” என்றார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
