தேர்தல் ஆணைக்குழுவின் மற்றுமொரு உறுப்பினரை கழுத்தறுத்து கொலை செய்வதாக மிரட்டல்!
இலங்கை தேர்தல் ஆணைக்குழுவினுடைய உறுப்பினர் எம்.எம்.முகமதுக்கு சமுக வலைத்தளமான வட்ஸ்அப் ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கத்திற்கு (கபே) முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்புில் கருத்து தெரிவிக்கும் போது கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மனாஸ் மகீம் இதனை தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழுவினுடைய உறுப்பினருக்கு வட்ஸ்அப் ஊடாக தொடர்ச்சியாக கொலை
அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர் பதவியில்
இருந்து விலகாவிடில் அவரை கழுத்தறுத்து கொலை செய்யப் போவதாகவும் தெரிவித்து
அச்சுறுத்துவதாக தெரிவித்து இன்றைய தினம் கபே அமைப்புக்கு முறைப்பாடு
அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
