சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் திட்டம் தொடர்பில் விசேட அறிவிப்பு
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சிறு மற்றும் நடுத்தர நிறுவன கடன் திட்டங்கள் குறித்த விசேட அறிவிப்பை நிதியமைச்சு வெளியிட்டுள்ளது.
விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த துறைகள் தொடர்பான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் செயல்பாட்டு மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான ஆதரவை இது வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சலுகை காலம்
சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் திட்டத்தின் மூலம் செயல்பாட்டு மூலதனக் கடன்களைப் பெற முடியும்.
மேலும் ஒரு நிறுவனத்தால் பெறக்கூடிய அதிகபட்ச கடன் தொகை ரூ. 10 மில்லியன் ரூபாவாகும்.
ஆறு மாதங்கள் அதிகபட்ச கடன் சலுகை காலத்துடன்,மூன்று ஆண்டுகளில் கடன் தொகையை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.