வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்காக அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய திட்டங்கள்
இலங்கையில் பொருளாதார ரீதியில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து டொலரை ஈட்டுவதற்கான பல்வேறு வழிமுறைகளை இலங்கை அரசாங்கம் கையாண்டு வருகிறது.
இதனடிப்படையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளில் ஈடுபடும் இலங்கையர்கள் ஆகியோருக்கான விசேட புதிய திட்டங்களை இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்துகிறது.
விசேட கடன் திட்டம்
இந்த நிலையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டிலுள்ள எந்தவொரு வர்த்தக வங்கிக்கும் வெளிநாட்டுப் பணத்தை அனுப்புவதன் ஊடாக பெறக்கூடிய அனுகூலம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி இவர்களுக்கான விசேட கடன் திட்டத்தை பெற்றுக் கொள்வதற்கான வசதியை ஏற்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறதாக தெரியவருகிறது.
அமைச்சர் பந்துல குணவர்தன இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
மின்சார வாகன இறக்குமதி
இதேவேளை முறையான வழிகளில் இலங்கைக்கு பணம் அனுப்பும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி கோரி அமைச்சரவையில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட உள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணத்தின் அளவை பொறுத்து அவர்களுக்கு இந்த வசதி வழங்கப்படும் அவர் கூறியிருந்தார்.
தற்போது வாகன இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளதால், மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான உரிமம் சட்டப்பூர்வ வழிகள் மற்றும் வங்கி மூலம் பணம் அனுப்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 9 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri