திருகோணமலையில் பெண் தலைமை குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள்
திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த உதவிகள், ஒரு மாத காலப்பகுதியில்
மூன்றாவது முறையாக இன்று (08.05.2024) அளிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, வருமானத்தை பெற்றுத்தரும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் நோக்கோடு தெரிவு செய்யப்பட்ட 11 குடும்பங்களுக்கு தலா ஒன்றரை இலட்சம் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரக் குழாய்கள் மற்றும் தூவல் நீர் பாசனக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஜீவனோபாயத்துக்கான ஊக்குவிப்பு
அத்துடன், இவற்றை திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் சண்முகம் குகதாசன் வழங்கி வைத்துள்ளார்.
அதேவேளை, பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு இந்த உதவிகள், அன்றாட ஜீவனோபாயத்துக்கான ஒரு ஊக்குவிப்பாக காணப்படுகிறது.
செய்தி - ஹஸ்பர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |