விலை அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு: அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை
லிட்ரோ நிறுவன எரிவாயு விலை அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலை அதிகரிக்கப்படாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலாம் இணைப்பு
லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரொன்றின் விலையானது 5175 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இதேவேளை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் புதிய தலைவராக விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக செயற்பட்டு வந்த தெஷார ஜயசிங்க கடந்த 15ஆம் திகதி தமது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இதனால் ஏற்பட்ட தலைவர் வெற்றிடத்திற்கே பொறியியலாளர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
