இன்று நள்ளிரவு முதல் குறைவடையும் லிட்ரோ எரிவாயு விலை- பத்திரிகை கண்ணோட்டம்
லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இன்று (04.07.2023) நள்ளிரவு முதல் குறைவடையவுள்ளதுடன், 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3,000 ரூபாவுக்கு குறைவான விலையில் நுகர்வோர் கொள்வனவு செய்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் பிரதி மாதமும் முதல் வாரத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்தவகையில் இன்று நள்ளிரவு முதல் புதிய விலைகள் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கு முன்னர் விற்பனை செய்யப்பட்ட விலையில் இம்முறை சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலை குறைப்பு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில், 12.5 கிலோ கிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவால் குறைவடையவுள்ளதாகவும் அதற்கிணங்க ஏனைய சமையல் எரிவாயு சிலிண்டர்களினதும் விலைகளில் மாற்றங்கள் ஏற்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
