லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு
லிட்ரோ எரிவாயுவின் விலை எதிர்வரும் 4 ஆம் திகதி முதல் திருத்தப்படவுள்ளதாக அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
கடந்த மாத திருத்தத்தின் போது எரிவாயுவின் விலை இம்முறையும் குறையும் என அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.
கடந்த மாதம் 4ஆம் திகதி லிட்ரோ நிறுவனம் மேற்கொண்ட விலைத் திருத்தத்தின் பிரகாரம், 12.5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 452 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 3,186 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டது.
எரிவாயுவின் விலை குறையும்

இதேவேளை 5 கிலோ கிராம் லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலை 1,281 ரூபாவாகவும், 2.3 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 598 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும் லாஃப் நிறுவனமும் எதிர்காலத்தில் விலை திருத்தம் செய்யப்படலாம் என்று சமீபத்தில் அறிவித்தது, ஆனால் இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri