நாட்டில் எரிவாயு பற்றாக்குறை : அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு
நாட்டில் எரிவாயு பற்றாக்குறை ஏற்படாது என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
எனவே பொய்யான அச்சத்தை பரப்ப வேண்டாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (18.12.2025) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
புதிய நிறுவனம் கண்டுபிடிப்பு
மேலும் தெரிவிக்கையில்,
எரிவாயு இறக்குமதிக்கான டெண்டர் செயல்முறை மூலம் ஒரு புதிய நிறுவனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்த நிறுவனத்தின் முதல் எரிவாயு கப்பல் ஜனவரி 5ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையும். கடந்த சில நாட்களுக்கு முன்பு எரிவாயுவை வழங்கியது ஓமன் நிறுவனம் தான்.

ஓமன் நிறுவனத்தை விட 15 சென்ட் குறைவான விலையில் ஒரு புதிய நிறுவனம் டெண்டருக்கு விண்ணப்பித்தது. அதன்படி, டெண்டர் குழு அந்தப் புதிய நிறுவனத்திற்கு அதை வழங்கியது.
ஒப்புதல்
ஒப்பந்தம் கையெழுத்தானது. தரத்தை ஆய்வு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 5ஆம் திகதிக்குள் முதல் கப்பல் இலங்கைக்கு வரும். எரிவாயு பற்றாக்குறை இருக்காது.
பொய்யான அச்சத்தை பரப்ப வேண்டாம். ஒரு நாடாக, நாம் அனைவரும் ஒன்றாக எழுவோம். அந்த உறுதிப்பாடு எங்களிடம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri