மன்னாரில் லிட்ரோ எரிவாயு விநியோகம்
மன்னாரில் இன்று காலை 9 மணி முதல் லிட்ரோ எரிவாயு வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் போக்குவரத்து மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மன்னாரில் பொதுவான ஒரு இடத்தில் வைத்து எரிவாயு விநியோகிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக லிட்ரோ நிறுவன விநியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
விநியோகம்
அதற்கு அமைவாக மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் வைத்து குறித்த எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட உள்ளன.
முதல் கட்டமாக ஒரு தொகுதி எரிவாயு சிலிண்டர்கள் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளன.
எரிவாயுவை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் குடும்ப அட்டையுடன் வருகை தந்து
பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.